ராம நதி, கடனா நதி அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு
Ramanathi Dam - இன்று முதல் நவம்பர் 11 -ந் தேதி வரை 110 நாட்களுக்கு கடனாநதி அணை, ராமநதி அணைகளில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
Ramanathi Dam -தென்காசி மாவட்டத்தின் பிரதான அணைகளான கடனாநதி மற்றும் ராமநதி அணைகள் மூலம் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. இதையடுத்து கார் சாகுபடி முன் சாகுபடிபணிகள் நடைபெற்று வரும் நிலையில் அணைகளில் இருந்து இன்று கார் சாகுபடிக்காக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தண்ணீர் திறந்து விட்டார். இதன் மூலம் கடனாநதி அணை பாசனத்திற்குள்பட்ட அரசபத்து, வடகுறுவப்பத்து, ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர் கால், காங்கேயன்கால் ஆகிய கால்வாய் பாசனத்திற்குட்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதேபோல் ராமநதி அணை பாசனத்திற்குட்பட்ட வடகால், தென்கால் மற்றும் பாப்பான்கால் ஆகிய கால்வாய் நேரடி பாசனத்தில் கடையம், மேலக்கடையம், கோவிந்தப்பேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், இடைகால், பொட்டல்புதூர், துப்பாக்குடி, அயன்பொட்டல்புதூர், பாப்பான்குளம், ரவணசமுத்திரம் ஆகிய கிராமங்களுக்குள்பட்ட 1008.19 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.
இன்று முதல் நவம்பர் 11 -ந் தேதி வரை 110 நாட்களுக்கு கடனாநதி அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 கன அடி வீதம் 664.60 கன அடிக்கு மிகாமலும், ராமநதி அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமலும் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து, தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
நிகழ்ச்சியில் தமிழக சட்டசபை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.பி.ராஜா, ஆளூர் ஷானவாஸ், சதன் திருமலைகுமார், ராஜ்குமார் மற்றும் தென்காசி எம்எல்ஏ உறுப்பினர் பழனி நாடார், அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2