ராமநதி - ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்

ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்க இருக்கிறது.;

Update: 2022-07-08 02:47 GMT

 நில ஆர்ஜிதம் செய்யும் அரசாணை நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்க இருக்கிறது.ஆறுமாதத்தில் திட்டப்பணி நிறைவடையும் என திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே அமைந்துள்ளது ராமநதி நீர்த்தேக்கம். இங்கிருந்து வெளியேறும் உபரி நீரை கால்வாய் அமைத்து ஜம்பு நதி இணைக்கும் திட்டம் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது.  இப்பணிகள் சரிவர நடைபெறவில்லை. இந்நிலையில் அதற்கான நில ஆர்ஜிதம் செய்யும் அரசாணை நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

கடையம்பெரும்பத்து, ஆவுடையானூர், வெங்கடாம்பட்டி ஆகிய கிராமங்களில் இதற்கென்று பணியமர்த்தப்பட்ட           அலுவலர்

வருவாய் துணை வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்கினர்.

இது சம்பந்தமான நிகழ்ச்சி கடையம்பெரும்பத்து கிராமத்தில் நடைபெற்றது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன்  கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட செயல்பாட்டுக்குழு அமைப்பாளர் இராம.உதயசூரியன் அவர்கள் தலைமை தாங்கினார்.

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரு.முத்துமாணிக்கம் அவர்கள் முன்னிலை வகித்தார். கடையம்பெரும்பத்து கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்

இந்திட்டத்தின் நிலைபற்றி மாவட்ட செயலாளர் அவர்கள் விரிவாக பேசி நில உரிமையாளர்களிடம் நிலம் கையகப்படுத்தும் ஆணையினை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும். ஒன்றியதுணை சேர்மனுமான மகேஸ்மாயவன், கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் ஜெயகுமார் கடையம்பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் சீலா பரமசிவம், கவுன்சிலர்கள் சங்கர், ஆவுடை கோமதி, தர்மராஜ் ரம்யா, காங்., கவுன்சிலர் மாரிக்குமார், கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஜெகதீசன், மாணவரணி மாரியப்பன், அவைத்தலைவர் ரவி, கிளை கழக செயலாளர்கள் சாமுவேல் சிவனையா பால்கனி, தளபதி மணி க.முருகன் இலட்சுமணன் யோசேப் பரமசிவம், தாவீது மோசஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நில உரிமையாளர் பாலமுருகன், பொன்னுச்சாமி மற்றும் நில உரிமையாளர்களுக்கு ஆணையினை பெற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News