ஆலங்குளத்தில் பொதுமக்களுக்கு இடையூறு: குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

ஆலங்குளத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஒருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-11-04 07:23 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சிஎஸ்ஐ சர்ச் தெருவை சேர்ந்தவர் சின்னமணி என்பவரின் மகன் அஜித்குமார் (24) .இவர் அதே பகுதிகளில் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, அஜித்குமார் மீது  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆலங்குளம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரனுக்கு எஸ்.பி., பரிந்துரையின்பேரில் ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, அஜித்குமாரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News