சாலையை சீரமைக்க கோரி செடி நடும் போராட்டம்
இரவணசமுத்திரம் கோவிந்தபேரி சாலையை சீரமைக்ககோரி தமுமுக சார்பில் சாலையில் செடி நடும் போராட்டம் இன்று நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் இரவணசமுத்திரம் முதல் கோவிந்தபேரி வரை முதலமைச்சரின் கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தில் சுமார் 2.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆறு மாத காலமாகியும் இன்று வரை வேலை தொடங்கப்படவில்லை.
பணிகளை துவங்காத அதிகாரிகளை கண்டித்து தமுமுக சார்பில் இரவணசமுத்திரம், கோவிந்தபேரி சாலையில் செடி நடும் போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த போராட்டம் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் கோதர் மைதீன் தலைமையில் நடைபெற்றது..
இதில் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சித்திக், ஒன்றிய தலைவர் மீரான்முகைதீன், மமக ஒன்றிய செயலாளர் சலீம் ஒன்றிய செயலாளர் அசார்,முதலியார்பட்டி கிளை தலைவர் ஹாலித், செயலாளர் சுலைமான், பொட்டல் புதூர் தமுமுக கிளை நிர்வாகிகள் சாகுல், அலி, நூர், மதார், ஜின்னா, முதலியார்பட்டி நிர்வாகிகள் ஜெய்லானி, இல்யாஸ், சாகுல், மிர்சா, பாதுசா மற்றும் திரலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இன்னும் ஒரு வார காலத்தில் பணிகளை துவங்காவிட்டால் தமுமுக சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.