ஆலங்குளம் தனியார் பள்ளி மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்
ஆலங்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தண்டனை வழங்கியதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் புகார்
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் பெண் பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று மழை காலம் குளிர்ச்சியான சூழலை உருவாகியுள்ள நிலையில் மாணவர்கள் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று பள்ளியின் ஆங்கில ஆசிரியரிடம் மாணவர்கள் கேட்டுள்ளனர்
இதற்கு அனுமதி அளித்த ஆசிரியர் சிறுநீர் கழித்து பின்னர் முழங்காலில் நிற்க வேண்டுமென கட்டளையிட்டுள்ளார் அதன்பின் 20 நிமிடங்களாக பள்ளி மாணவர்கள் முழங்காலில் நின்று உள்ளனர். பின்பு பள்ளியில் குறிப்பிட்ட தூரம் வரை முழங்காலில் நடக்க வைத்துள்ளார் இதனால் மாணவர்களின் முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்த கசிவு ஏற்பட்ட நிலையில் ஸ்ரீ ஹரிஷ் (12) என்ற மாணவனின் தாயார் முத்துசெல்வி அரசு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
இதுகுறித்து தாயார் முத்துச்செல்வி தனியார்பள்ளி நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்கும்பொழுது உரிய பதில் அளிக்காமல் தொலைபேசி இணைப்பினை துண்டித்து விட்டார். இதனால் மாணவன் பெற்றோர் மன உளைச்சலால் ஆலங்குளம் காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகி மீது புகார் மனு அளித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் சிறுநீர் கழிக்க பள்ளி ஆசிரியர் முழங்காலில் நிற்க வைத்து தண்டனை வழங்கியது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க பள்ளி நிர்வாகத்தின் மீதும் மற்றும் ஆசிரியர் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் முத்துசெல்வி புகார் மனு கொடுத்துள்ளார்.
பள்ளி மாணவர்களின் சிறுநீர் கழிக்க அனுமதிக்காத சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் சமூகஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.