பங்குனிப் பெருந்திருவிழா: ஆழ்வார்குறிச்சியில் தேர் திருவிழா கோலாகலம்

கடையம் அருகே ஆழ்வார்குறிச்சியில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது - அம்பாள் தேரை பெண்கள் மட்டும் வடம்பிடித்து இழுத்தனர்.

Update: 2022-04-14 04:15 GMT

கடையம் அருகே ஆழ்வார்குறிச்சியில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது - அம்பாள் தேரை பெண்கள் மட்டும் வடம்பிடித்து இழுத்தனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே சிவசைலத்தில் உள்ள அருள்தரும் பரமகல்யாணி அம்பாள் உடனுறை அருள்மிகு சிவசைலநாத சாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா கடந்த 3 - ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகியது. தொடர்ந்து சுவாமி அம்பாள் ஆழ்வார்குறிச்சிக்கு எழுந்தருளி அங்கு நாள் தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காராம், ஆராதனை மற்றும் காலை மாலை வீதி உலா நடைபெற்று வந்தது.

11 - ம் திருநாளான நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு சாமி அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்துத் தேர் இழுத்தனர். சாமி தேரை ஆண் மற்றும் பெண்களும், அம்மன் தேரை பெண்கள் மட்டும் வடம்பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், பொட்டல்புதூர், பாப்பான்குளம், ஆம்பூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரிழுத்து வழிபட்டனர்.

Tags:    

Similar News