தென்காசியில் கேரளாவிற்கு பான்மசாலா கடத்த முயன்றவர் கைது
கேரளாவிற்கு காய்கறி மூட்டையுடன், தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.;
ஆலங்குளத்தில் 1 டன் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, துத்திகுளம் சாலையில் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் கடத்தப்படுவதாக நேற்று இரவு ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் எஸ் ஐ தினேஷ்பாபு மற்றும் போலீசார் துத்திகுளம் சாலையில் சோதனை செய்தனர்.
சோதனையில், சாலையோரம் அருகில் இருந்த காய்கறி குடோனில் மூட்டையை இறக்கிய சரக்கு வாகனைத்தை சோதனை செய்தனர். அதில் மூட்டைக்குள் இருந்தது, தடை செய்யப்பட்ட குட்கா , பான்மசாலா என தெரியவந்தது. விசாரணையில், பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட பான்மசாலா, குட்கா ஆலங்குளத்தில் இருந்து காய்கறி மூட்டையுடன் கேரளா கடத்த முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குபதிவு செய்த ஆலங்குளம் போலீசார், ஆலங்குளம் அண்ணாநகரை சேர்ந்த ராமலிங்கம் மகன் ஆதிலிங்கத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 5 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.