கீழக்கடையம் ஊராட்சியில் பனை விதைப்பு திருவிழா

பனை வாழ்வியல் இயக்கம் சார்பில் பனை விதைப்பு திருவிழா புலவனூர் சாலையோரம் உள்ள தங்கச்சியான்குளத்தில் நடைபெற்றது.

Update: 2021-12-10 08:30 GMT

தென்காசி மாவட்டம் கீழக்கடையம் ஊராட்சி நிர்வாகம்,  மற்றும் பனை வாழ்வியல் இயக்கம் சார்பில்,  பனை விதைப்பு திருவிழா புலவனூர் சாலையோரம் உள்ள தங்கச்சியான்குளத்தில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பூமிநாத் தலைமை வகித்தார். பனை வாழ்வியல் இயக்க தலைவர் பா.ஜான்பீட்டர் முன்னிலை வகித்தார். ஊராட்சி துணை தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் வரவேற்றார்.

கடையம் தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் முத்துராமலிங்கம், புலவனூர் பணித்தள பொறுப்பாளர் பொன் பாண்டி, வார்டு உறுப்பினர் சங்கர், முன்னோடி விவசாயி கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை பனை வாழ்வியல் இயக்க நிர்வாகிகள் பாலசிங், தாமஸ் ஸ்டீபன் மெல்கி, சொரிமுத்து, கார்த்திக், தன்னார்வலர்கள் சுப்புக்குட்டி, ராசுக்குட்டி மற்றும் பலர் செய்திருந்தனர்.

முதற்கட்டமாக, தங்கச்சியான்குளத்தில் 500க்கும் மேற்பட்ட விதைகள் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து தெற்கு கடையம், மடத்தூர், தெற்கு மடத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் பனை விதைகள் நடவு செய்யவும், குறுங்காடுகள் அமைக்கவும் திட்டமிட்டு உள்ளதாக பனை வாழ்வியல் இயக்க நிர்வாகிகள் தெரி்வித்துள்ளனர்.

Tags:    

Similar News