டூவீலரில் சென்ற போது விபத்து: பெண் பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, டூவிலரில் சென்றபோது கீழே விழுந்து, பெண் பலியானார்.;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேஅய்யனார்குளத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மனைவி சுப்புலட்சுமி(52). இருவரும் தனது மூன்றாவது மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுப்பதற்காக முக்கூடல் அருகே உள்ள அரசன்குளத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
மருதம்புத்தூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் இருந்த சுப்புலட்சுமி நிலைதடுமாறி மொபட்டில் இருந்து சாலையில் விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சுப்புலட்சுமியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைகாக பாளையங்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக, சுப்புலட்சுமி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.