மாவட்ட ஆட்சியரை மறித்து சேலை கேட்ட மூதாட்டி

மாவட்ட ஆட்சியரை மறித்து சேலை கேட்ட மூதாட்டி ,சிரித்தபடி பணம் கொடுத்த ஆட்சியர்.

Update: 2023-02-08 04:15 GMT

பட விளக்கம்: மாவட்ட ஆட்சியரை மறித்து மூதாட்டி சேலை கேட்க போது எடுத்த படம்.

மாவட்ட ஆட்சியரை மறித்து சேலை கேட்ட மூதாட்டி ,சிரித்தபடி பணம் கொடுத்த ஆட்சியர்.

தென்காசி மாவட்டத்தின் ஐந்தாவது புதிய ஆட்சியராக துரை ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். நான் கிராமத்தில் பிறந்தவன். எனவே விவசாயிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்றது.

அதனைத் தொடர்ந்து ஆலங்குளம் பகுதியில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

ஆலங்குளம் அரசு மருத்துவமனை,டெங்கு பாதிப்பு பகுதிகள்,ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர்,உடையாம்புளி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று நேரடியாக ஆய்வு செய்து கொண்டிருந்தார்.இந்நிலையில் உடையாம்புளி என்ற கிராமத்தில் உள்ள தெருவில் ஆய்வு செய்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மூதாட்டி ஒருவர் சேலை வேணும் வாங்கி தாங்க என கை நீட்டி கேட்டார்.சிரித்தபடியே பணம் எடுத்து மூதாட்டியிடம் கொடுத்தார்.பணத்தை பெற்று கொண்ட மூதாட்டி நீங்க நல்லா இருக்கணும் என வாழ்த்தி சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. போதிய உபகரணங்கள் இல்லை. போதிய மருந்துகள் இல்லை. மேலும் மருத்துவமனையில் நோயாளிகள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலங்குளத்தை சார்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் விரைவில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று மருத்துவமனை முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News