செல்போன் கடையில் ஊழியரின் செல்போனை திருடும் வட இந்தியர்கள்: சிசிடிவி காட்சிகள்

செல்போன் கடையில் ஊழியரின் செல்போனை திருடும் வட இந்தியர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.;

Update: 2023-01-26 07:21 GMT

செல்போன் திருடும் வட இந்தியர்கள்.

தென்காசி மாவட்டம் கடையம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் இசக்கி என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த 3 வட இந்தியர்கள் பொருட்கள் வாங்குவது போல் அங்கு வேலை பார்க்கும் பெண்ணின் மொபைல் போனை நைசாக திருடி சென்றனர். தொடர்ந்து அந்த போனை விற்பதற்கு மற்றொரு கடைக்கு சென்றனர். இதற்கிடையில் அந்த பெண்ணின் போன் காணாமல் போனது தெரிய வருகிறது.

தொடர்ந்து தகவலறிந்த வந்த கடையம் போலீசார் செல்போன் கடை மற்றும் செல்போனை விற்பனை செய்ய முயன்ற கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அவர்களை பிடித்தனர்.

பிடிபட்டவர்கள் கடையம் அருகேயுள்ள கோவிந்தபேரி பகுதியில் செங்கல் சூலையில் வேலை செய்யும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ராஜீவ், கோபால், பிஷவத் என தெரிய வந்தது. தொடர்ந்து மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினார். தொடர்ந்து திருடு போன போன் அந்த பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. வட இந்தியர்கள் மூன்று பேர் மொபைல் கடையில் மொபைல் திருடும் இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News