கீழாம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வட்டார விவசாய சங்க தலைவர் வேட்புமனு

கீழாம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வட்டார விவசாய சங்க தலைவர் சட்டநாதன் வேட்புமனுத்தாக்கல்;

Update: 2021-09-21 04:24 GMT

கீழாம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த வட்டார விவசாய சங்க தலைவர் சட்டநாதன்.

தென்காசி மாவட்டத்தில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, கடையம் ஒன்றியம் பகுதியில் அமைந்துள்ளது கீழாம்பூர் ஊராட்சி.

இந்த ஊராட்சியில் சுமார் 6 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். ஒன்பது வார்டுகள் உள்ளது. இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது நடைபெறும் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆம்பூர் வட்டார விவசாய சங்க தலைவர் சட்டநாதன் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு பார்வதி என்ற பெண்ணும், ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு இரண்டு பெண்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News