புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்த எம்பி ஞான திரவியம்
Panchayat Office - புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், ஞான திரவியம் எம்பி ஆகியோர் திறந்து வைத்தார்.;
Panchayat Office - தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு 23 பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த 23 பஞ்சாயத்துகளில் ஐந்தாங்கட்டளை பஞ்சாயத்து அலுவலகம் பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்தது. நிர்வாக வசதி காரணமாக கட்டிடத்தை மாற்ற கோரிக்கை எழுந்த நிலையில், ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது புதிய கட்டிட பணிகள் முடிவுற்ற நிலையில் இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். ஐந்தாங்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதி பெரியசாமி, தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், கடையம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் அருணன், மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி, கடையம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஆணையாளர் முருகையா, கடையம் ஒன்றிய குழு தலைவர் செல்லம்மாள், பாப்பாக்குடி ஒன்றிய துணை சேர்மன் மாரி வண்ணமுத்து மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2