பூலாங்குளத்தில் சிலம்பப் பயிற்சி; 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பு
தென்காசி மாவட்டம், பூலாங்குளத்தில் நடந்த சிலம்பப் பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.;
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகிலுள்ள பூலாங்குளம் ஜிபிஎஸ் தோட்டத்தில், இந்திய வீர கலை சங்கம் சார்பில் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய வீரக்கலை சங்க தலைவர் சேகர் தலைமையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தென்காசி, பாவூர்சத்திரம், பூலான்குளம், கீழப்பாவூர், ஆவுடையானூர், ஆழ்வார்குறிச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிலம்பக்கலை மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்றனர்.
இந்த பயிற்சியில் வீரக்கலை பயிற்சியாளர்கள் ஹரிஹரன், பாலசுப்பிரமணியன், லெட்சுமி, வள்ளிசெல்வம், சிவசங்கர், சக்தி முருகன் ஆகியோர் முன்னின்று பயிற்சி அளித்தார்கள்.
இதனையடுத்து பயிற்சியில் பங்கு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.