தண்ணீர் தொட்டி அமைக்க அடிகல் நாட்டிய எம்எல்ஏ

ஊத்துமலையில் தண்ணீர் தொட்டி அமைக்க சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்.;

Update: 2022-03-14 05:30 GMT

தண்ணீர் தொட்டி அமைக்க அடிகல் நாட்டிய தென்காசி எம்எல்ஏ பழனிநாடார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் சீவலபரவு ஊராட்சியில் ஊத்துமலை அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் 10000 லிட்டர் வாட்டர் டேங்க் மற்றும் போர்வெல் அமைத்திட தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூபாய் 7.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் பணி தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டினார். ஊத்துமலை இளைய ஜமீன்தார் முரளிராஜா  நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முத்தம்மாள்புரம், மருக்கலான்குளம் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக இளைஞரணி செயலாளர் மணிகண்டன், ஊத்துமலை காங்கிரஸ் நிர்வாகிகள் முருகன், மருதுபாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News