ஆழ்வார்குறிச்சி அருகே ஆடு திருடி விற்க முயன்ற நபர் கைது
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஆம்பூரில் ஆடு திருடி விற்க முயன்ற நபர் கைது.
ஆழ்வார்குறிச்சி அருகே ஆடு திருடி விற்க முயன்ற நபர் கைது செய்து சிறையில் அடைப்பு.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஆம்பூரில் வசித்து வரும் மாரியப்பன்(45) என்பவர் ஆடுகளை வளர்த்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது ஆட்டு மந்தையில் இருந்த ஆடு ஒன்றை யாரோ திருடிச் சென்றதாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் பரமசிவன் விசாரணை மேற்கொண்டதில் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த வேல்பாண்டி என்பவரின் மகன் தங்கதுரை (40) ஆட்டை திருடி முக்கூடல் சந்தையில் விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து மேற்படி ஆடு திருடி விற்பனை செய்ய முயன்ற தங்கதுரை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.