கடையம் அருகே மின்சாரம் தாக்கி சிறுத்தை குட்டி பலி: வனத்துறையினர் விசாரணை
கடையம் அருகே மின்சாரம் தாக்கி சிறுத்தை குட்டி இறந்ததால் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே தனியார் தோட்டத்தில் சிறுத்தை குட்டி ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டை துணை இயக்குனர் செண்பக பிரியா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்தில் சென்று ஆய்வு செய்தனர். அதில் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்த மயிலை பிடிப்பதற்காக சிறுத்தை தாவி மின்சார கம்பியில் அடிபட்டு இறந்ததாக தெரிய வருகிறது.
இதனை அடுத்து கால்நடை மருத்துவர் மனோகரன் கால்நடை மேற்பார்வையாளர் அர்னால்ட் ஆகியோர் சிறுத்தை குட்டி உடலை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.