ஆலங்குளம் அருகே கழிவுகளுடன் வந்த கேரள லாரி பறிமுதல்- இருவர் கைது

ஆலங்குளம் அருகே கழிவுகளுடன் வந்த கேரள லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-29 07:17 GMT

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்.

கேரளக் கழிவுகளுடன் வந்த லாரி ஆலங்குளத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக  2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரளத்தில் இருந்து கழிவுப் பொருட்களை ஏற்றி வருவதும் அவற்கை பொது மக்கள் தடுத்து நிறுத்துவதும், போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கேரளத்தில் இருந்து கழிவுப் பொருள்களை ஏற்றி வந்த லாரியை ஆலங்குளத்தில் போலீஸாா் பறிமுதல் செய்தனா். லாரி டிரைவா், குப்பைகளைக் கொட்டுவதற்கு இடம் பாா்த்துக் கொடுக்கும் புரோக்கா் ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

பிளாஸ்டிக், தொ்மாகோல், பழைய துணிகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை கேரளத்தில் இருந்து ஆலங்குளம் பகுதிகளில் கொண்டு வந்து கொட்டுவதை சில லாரி டிரைவா்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.இந்நிலையில் ஆலங்குளம் பத்திரகாளியம்மன் கோயில் முன்பாக நின்றிருந்த லாரியில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி மக்கள் சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரனுக்கு தகவல் அளித்தனா். சுகாதாரத் துறை மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் வந்து அந்த லாரியை சோதனையிட்ட போது, அதில் கழிவுப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட நபர்.

இதையடுத்து, ஆலங்குளம் போலீஸில் கங்காதரன் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி டிரைவா் திருவனந்தபுரம் ஜோசன்ராஜ் (43), தமிழ்நாட்டில் கழிவுகளைக் கொட்ட இடம் பாா்த்துக் கொடுக்கும் புரோக்கா் ஆலங்குளம் ஆறுமுகம்(50) ஆகிய இருவரையும் கைது செய்தனா். சுமாா் 10 டன் எடையுள்ள கழிவுப் பொருள்களுடன் கூடிய லாரி பறிமுதல் செய்யப்பட்டன.

கேரளாவில் இருந்து கழிவு பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags:    

Similar News