கீழாம்பூர் சிவசைலம் சிவசைலநாதர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா

சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் சமேத அருள்மிகு சிவசைலநாதர் வசந்த உற்சவ திருவிழா கீழாம்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.;

Update: 2022-05-22 12:47 GMT

சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் சமேத அருள்மிகு சிவசைலநாதர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது.

சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் சமேத அருள்மிகு சிவசைலநாதர் வசந்த உற்சவ திருவிழா கீழாம்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சிவசைலம் அருள் தரும் பரமகல்யாணி அம்பாள் சமேத அருள்மிகு சிவசைலநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. மேற்கு நோக்கி அமைந்த இத்திருத்தலத்தில் மூலவர் சிவசைலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். சிவசைலம் அருகே உள்ள கீழ ஆம்பூரில் அசரீரி வாக்குப்படி கிராமத்தின் நடுவில் உள்ள கிணற்றில் நான்கு கைகளுடன் அம்மன் கண்டெடுக்கப்பட்டு இங்கு சிவசைலநாதருடன் சோ்ந்து கோவில் கொண்டுள்ளார் சுதா்சன பாண்டிய மன்னனுக்கு ஜடாமுடியுடன் தரிசனம் காட்டி திருவிளையாடல் நடைபெற்ற இடம்.

ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் கீழஆம்பூரில் கண்டெடுக்கப்பட்டதால் இவ்வூர் அம்பாளின் பிறந்த வீடானது. திருமணத்துக்குப்பின் மறுவீடு காண்பது என்பது தமிழா் பழக்கத்தில் இருந்து வரும் ஒரு நிகழ்வு. அதனை ஞாபகப்படுத்தும் வண்ணமாக ஒவ்வொரு ஆண்டும் சிவசைலநாதர்தேர் திருவிழா முடிந்ததும் பரமகல்யாணி அம்பாளையும் சிவசைலநாதரையும் கீழ ஆம்பூருக்கு அழைத்து வந்து 3 தினங்கள் வசந்த உற்சவமாக நூற்றாண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக நேற்று சிவசைலத்தில் இருந்து சுவாமி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கீழ ஆம்பூர் பட்டிணப்பிரவேசத்தை சிறப்பாக நடத்தினர். தொடாந்து இன்று காலையில் சுவாமி அம்பாள் இரட்டை ரிஷப வாகன புற்பாடு மதியம் விளா பூஜை ருத்ர ஏகாதசி ஜபம் நடைபெற்றது. மாலையில் கடனை நதியில் இருந்து தீா்த்தம் எடுத்துவரப்பட்டு கும்ப பூஜை நடைபெற்றது.

தொடா்நது சுவாமி அம்பாளுக்கு 16 வகையான வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று நிறைவாக மகா கும்ப அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த சுவாமி அம்பாளுக்கு பூஜைகள் நடைபெற்று கோபுர ஆரத்தி நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டு சோடச உபசாரங்கள் நடைபெற்றது. இரவில் சுவாமி அம்பாள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. ஸ்ரீ சிவசைலபதி பரமகல்யாணி பக்தசபா 1965 முதல் கடந்த 57 வருடங்களாக நடத்தி வருகின்றனர், இந் நிகழ்வினை ஸ்ரீ சிவசைலபதி பரமகல்யாணி பக்தசபா 1965 முதல் கடந்த 57 வருடங்களாக நடத்தி வருகின்றனர்,

Tags:    

Similar News