கடையம் பகுதிக்கு ஆளுநர் வருகை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்., கவுன்சிலர் கைது
கடையம் பகுதிக்கு ஆளுநர் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்., கவுன்சிலர் கைது செய்ய்பட்டார்.
ராகுல்காந்தியை அமலாக்கத்துறை விசாரித்து வருவதை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மத்திய அரசை கண்டித்து ஆளுநர் அலுவலகம் முன்பு அடிக்கடி போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று மாலை கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோவிந்தப்பேரி, ராஜாங்கபுரம் போன்ற கிராமங்களில் ஆளுநர் கே.என்.ரவியின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அப்போது கடையத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் மாரிகுமார் என்பவர் நேஷனல் ஹெரால்டு வழக்கிற்காக ராகுல் காந்தியை மத்திய அரசின் அமலாக்கத்துறை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதாகவும், அதைக் கண்டித்து இன்று கடையம் வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகை ஏந்தி போராட இருப்பதாக காவல்துறையின் தனிப் பிரிவுக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் கடையம் காவல்துறை உதவி ஆய்வாளர் கோபால் தலைமையில் போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாரி குமாரை இன்று அதிகாலை கைது செய்தனர். இதனால் கடையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது