அரசு பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி
ஆலங்குளத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் 7 பேர் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அரசு மேல்நிலைபள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டுதோறும் மத்திய அரசின் சார்பில் நடக்கும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டு வருகிறார்கள்.கடந்த ஆண்டு 7 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 3 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.இந்த ஆண்டு 2020-2021 நடந்த தேர்வில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேர் தேர்வு எழுதினர்.
அதில் 7 மாணவ மாணவியர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மானவர்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 12 ஆயிரம் வீதம் 48 ஆயிரம் கல்வி உதவி தொகையாக மத்திய அரசு சார்பில் வழங்கபடுகிறது.தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜூலியானா டெய்சி மேரி பரிசு வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்,ஆசிரியர்கள்,ஊர்பொதுமக்கள் பாராட்டினர்.