கடையம் பகுதியில் இன்று 13 இடங்களில் மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம்

கடையம் பகுதியில் இன்று 13 இடங்களில் மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2021-09-19 05:31 GMT

பைல் படம்.

கடையம் வட்டாரத்தில் 13 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த மாபெரும் தடுப்பூசி முகாம்கள் காலை 7.00 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.

அதன்படி,

1. புலவனூர் துணை சுகாதார நிலையம்

2. தெற்கு கடையம் சத்திரம் பாரதி பெண்கள் உயர் நிலைப் பள்ளி

3. பொட்டல் புதூர் ஊராட்சி தொடக்க பள்ளி

4. இரவணா சமுத்திரம் துணை சுகாதார நிலையம்

5. சம்பன் குளம் சமுதாய நலக் கூடம்

6. கருத்தப்பிள்ளையூர் சமுதாய நலக் கூடம்

7. வெய்காலிப்பட்டி துணை சுகாதார நிலையம்

8. புங்கம்பட்டி ஊட்டச்சத்து கூடம்

9. வெங்கடாம் பட்டி நடுநிலை பள்ளி

10. ஆம்பூர் பஞ்சாயத்து அலுவலகம்

11. A.P நாடானூர் ரோஸ்லின் தொடக்க பள்ளி

12. அடைச்சாணி துணை சுகாதார நிலையம்

13 .ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி அலுவலகம்

ஆகிய 13 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News