ஆழ்வார்குறிச்சி கோயிலில் பழம் எறிதல் விழா

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மதநல்லிணக்கமாக விளங்கும் பட்டாணி பாறையிலிருந்து பழம் எறியும் நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2023-05-10 16:30 GMT

ஆழ்வார்குறிச்சியில் பழம் எறிதல் விழா நடைபெற்றது 

ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா கோவில் கொடைவிழா - பட்டாணி பாறையில் பழம் எறியும் நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் கலந்துகொண்டு போட்டிப்போட்டு பழத்தை பெற்று சென்றனர்

தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சியில் 141 கிராம சேனைத்தலைவர் சமுதாய வரிதாரர்களுக்கு பாத்தியப்பட்ட காக்கும் பெருமாள் சாஸ்தா மற்றும் சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கால் நாட்டு நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு அலங்கார, அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

நேற்று மதியம் உச்சிகால கொடை நடைபெற்றது. அப்போது விழாவின் முக்கிய நிகழ்வான இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மதநல்லிணக்கமாக விளங்கும் பட்டாணி பாறையிலிருந்து பழம் எறியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு பழத்தை பெற்றுக் கொண்டு சென்றனர். முன்னதாக அந்த பாறையில் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த சேவல்களை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை 141 கிராம சேனைத்தலைவர் சமுதாய வரிதாரர்கள், கோயில் வளர்ச்சி நல கமிட்டி நிர்வாகிகள் உறுப்பினர்கள், அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்

Tags:    

Similar News