கடையம் அருகே வீடு இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு திமுக நிதியுதவி

கடையம் அருகே வீடு இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு திமுகவினர் நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.;

Update: 2022-04-12 16:46 GMT

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய திமுகவினர்.

கடையம் ஒன்றியம் மந்தியூர் ஊராட்சி வாகை குளத்தில் நேற்று பெய்த மழையால் மேல் மாடி இடிந்து விழுந்து தரை தளத்தில் படுத்திருந்த 58 வயது கல்யாணசுந்தரம் என்பவரும், 20 வயதுடைய அவருடைய மகள் ரேவதி என்பவரும் கட்டிடம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

அவருடைய மனைவி வேலம்மாள் படுகாயமுற்று மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். அவருக்கு மொத்தம் நான்கு பெண் குழந்தைகள் 3 நபருக்கு திருமணம் ஆகிவிட்டது. நான்காவது குழந்தை ரேவதி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஜெயக்குமார், மகேஷ் மாயவன், கீழப்பாவூர் சீனித்துரை மற்றும் கழக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அவரது குடும்பத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News