கடையம் கோவிலில் ஆகம விதிமுறை மீறி படப்பிடிப்பு: பக்தர்கள் குற்றச்சாட்டு

கடையம் கோவிலில் ஆகம விதிமுறை மீறி படப்பிடிப்பு நடப்பதாக பக்தர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2022-04-24 02:51 GMT

கோவிலில் செட் அமைக்கும் படப்பிடிப்பு குழுவினர்.

தென்காசி மாவட்டம், கடையத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்த நித்ய கல்யாணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பாரதியாரால் வழிபடப்பட்ட சிறப்பு மிகுந்த ஆலயமாகும். இப்படி பெருமை வாய்ந்த கோயிலை சினிமா படப்பிடிப்புக்கு வாடகைக்கு விடும் அறநிலையதுறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்து சமய அறநிலைத்துறை விதிகளை மீறி கோவிலுக்குள்ளே படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். மேலும் இன்று முதல் வரும் நான்கு நாட்களுக்கு படப்பிடிப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் அன்னதான கூடத்தை மறைத்து செட் போட படப்பிடிப்பு குழுவினருக்கு அனுமதி கொடுத்தது யார்? ஆகம விதிகளை மீறி ஆன்மீகத் தளங்களை படப்பிடிப்பு தளங்களாக்கும் கடையம் அறநிலையத்துறை அதிகாரி மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவிலின் பழமையை மாற்றும் வண்ணம் வண்ணங்களை தீட்டியும், கோவில் சுற்றுப்புறங்களில் செட் அமைத்தும் நடக்கும் படப்பிடிப்பினை நிறுத்தி கோவிலின் பழமையையும் ஆகம விதி முறைகளையும் காக்கும் வண்ணம் வழிபாட்டுத்தலத்தின் புனிதத்தை காக்க அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News