தென்காசி: தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்ரமணியன்

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-09-12 05:15 GMT

ஆலங்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். 

தமிழக அரசின் உத்தரவுக்கேற்ப, இன்றுமாநிலம் தழுவிய மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறன.  தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெற்று வருகிறது. 

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம, நகர மற்றும் நகராட்சி பகுதிகளில், கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் வகையில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலையங்கள், பள்ளி மற்றும் சமுதாய நலக்கூடம் என, மொத்தம் 614 மையங்களில் முகாம் நடைபெற்று வருகிறது. இதில், 18 வயதிற்கு மேற்பட்ட முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட வேண்டிய நபர்கள் உட்பட 70,000 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆலங்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர கோபால்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News