சோலைசேரியில் 800 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி
சோலைசேரியில் 800 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.;
தென்காசி மாவட்டம் சோலைசேரியில் உள்ள செல்வி மெமோரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சுமார் 800 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களாக அரிசி, சர்க்கரை, பருப்பு, மசாலா மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை சோலைசேரி சேகரதலைவர் ஜெபரத்தினம் ஜெபம் செய்து ஆசீர்வதித்தார். நிகழ்ச்சிக்கு தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கி பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார். டி.பி.சி மற்றும் செல்வி குரூப் இயக்குனர் டி.பி.சி. ராஜா, செல்வி கயர் கம்பெனி அதிபர் டதனராஜ் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக் கும் முககவசம் இலவசமாக வழங்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.