கொரோனா தொற்று விழிப்புணர்வு கூட்டம்...

ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகம்

Update: 2021-05-11 04:57 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்தும் ஊரடங்கு உத்தரவின் போது வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி.ஆலங்குளம் வட்டாட்சியர் பட்டமுத்து முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துப்பாண்டி, செல்வராஜ், உதவி ஆய்வாளர் பாரத் லிங்கம், வட்டார சுகாதாரமேற்பார்வையாளர் அரிகரசுதன், வட்டார மருத்துவர் குத்தாலராஜ், ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி மற்றும் வியாபாரிகள், மொத்த காய்கறி வியாபாரிகள், பீடி தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கொரோனா தொற்று விழிப்புணர்வு குறித்து பேசினர்.

ஆலங்குளம் வட்டாரத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க வியாபாரிகள் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க அவர்களை வலியுறுத்தவேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதின் முக்கியத்துவம் குறித்தும் வியாபாரிகளுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News