ஆலங்குளம் வழக்கறிஞர் சங்கத்திற்கு கணினி, இன்வெர்ட்டர் வழங்கிய திமுகவினர்
ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு கணினி, இன்வெர்ட்டர் ஆகிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு கணினி, இன்வெர்ட்டர் ஆகிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆலங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் திவ்யா மணிகண்டன் அவர்களின் ஏற்பாட்டில் ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிலான கணினி மற்றும் இன்வெர்ட்டர் ஆகிய பொருட்களை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அன்புதாஸ், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆலடி மானா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி ஆலங்குளம் ஒன்றிய கழக செயலாளர் செல்லத்துரை, மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் விஜயன் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மேகநாதன் தொழிலதிபர் மாரித்துரை, மற்றும் வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.