ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கல்லூரி மாணவிகள்

Today News For College Students - ஆலங்குளத்திலேயே கல்லூரி தொடர்ந்து இயங்கும், திருநெல்வேலி செல்ல வேண்டியதில்லை என்ற அதிகாரிகளின் உத்திரவாதத்தையடுத்து மாணவிகள் கலைந்து சென்றனர்.

Update: 2022-09-07 02:15 GMT

ஆலங்குளம் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவிகள்.

Today News For College Students -ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவிகளை 25 கிலோ மீட்டர் தொலைவுள்ள திருநெல்வேலிக்குச் சென்று வர கூறியதைக் கண்டித்து மாணவிகள் ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக் கட்டித்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த மே 13 இல் கல்லூரிக்கு சொந்தக் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதனிடையே தற்போது 3 வது கல்வி ஆண்டாக மாணவிகள் சேர்க்கை நடைபெற்ற நிலையில் மாணவிகளின் எண்ணிக்கை 800 க்கும் அதிகமாகியுள்ளது. மாணவிகள் அனைவருக்கும் தற்போது செயல்பட்டு வரும் வாடகைக் கட்டிடம் போதுமானதாக இல்லை என்பதால் மாற்று ஏற்பாடாக சுமார் 250 மாணவிகள் ஆலங்குளத்திலும் மற்ற மாணவிகள் கல்வி பயில திருநெல்வேலி ராணி அண்ணா மகளிர் கல்லூரியின் புதிய கட்டிடத்திலும் திங்கள்கிழமை முதல் ஏற்பாடு செய்யப்பட்டது.

கூடுதல் தொலைவு பயணம் செய்வதால் போக்குவரத்து செலவு அதிகரிக்கும், வீடு திரும்ப வெகுநேரம் ஆகும் என்பதால் திருநெல்வேலி கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பைக் கண்டித்தும் ஆலங்குளத்திலேயே கல்லூரி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற கோரிகைகயை வலியுறுத்தியும் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் தாசில்தார் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆலங்குளத்திலேயே கல்லூரி தொடர்ந்து இயங்கும், திருநெல்வேலி செல்ல வேண்டியதில்லை என்ற அதிகாரிகளின் உத்திரவாதத்தையடுத்து மாணவிகள் கலைந்து சென்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News