அரசு பேருந்து இல்லாததால் மாணவர்களின் உயிரோடு விளையாடும் மினி பேருந்துகள்

ஆலங்குளத்தில் அரசு பேருந்து இயக்கப்படாததால் மாணவர்களின் உயிரோடு விளையாடும் மினி பேருந்துகள்.

Update: 2022-03-30 06:04 GMT

மினி பேருந்து இயக்குவதில் ஏற்பட்ட தகராறில், நடத்துநர் ஒருவர் கம்பியுடன் வந்து ஒரு மினி பேருந்து கண்ணாடி உடைக்க வந்த காட்சி

ஆலங்குளத்தில் இருந்து நல்லூருக்கு செல்ல பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினந்தோறும் 2000 க்கும் மேற்பட்டவர் மினி பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். அரசு பேருந்து இல்லாத காரணத்தால் மினி பேருந்துகளில் மட்டும் தனியார் கல்லூரியில் 1500 மாணவ,மாணவ,மாணவியர்கள்,என சுமார் ஆயிரம் பேர் சென்று வருகின்றனர்

இந்த தடத்தில் இயக்குவதில் ஒட்டுநர்களுக்கு இடையே கடும் போட்டியும் , மோதலும் அவ்வப்போது ஏற்படுகிறது. நேருக்கு நேர் மோதுவது போல செல்வது, அளவிற்கு அதிகமாக மாணவ, மாணவிகளை ஏற்றி செல்வது , ஊருக்குள் அதிவேகமாக தாறுமாறாக ஒட்டுவது என மினி பேருந்து அட்டகாசம் ஆலங்குளம் பகுதியில் அதிகரித்துள்ளது.

தற்போது அது போல அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேருந்தை இயக்காமல் அவர்கள் விருப்பம் நேரத்திற்கு இயக்குவதும் வாடிக்கையாக நடந்துவருகிறது. இந்த தடத்தில் ஆலங்குளம் நல்லூருக்கு ஒரு மினி பேருந்துக்கு மட்டும் நேரடி அனுமதி உள்ளது.

தற்போது மினி பேருந்து இயக்குவதில் ஏற்பட்ட தகராறில், நடத்துநர் ஒருவர் கம்பியுடன் வந்து ஒரு மினி பேருந்து கண்ணாடி உடைக்கும் சி.சி.டி.வி.வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வண்ணம் பொது இடத்தில் ஆயுதம் கொண்டு தனியார் பேருந்து முகப்பு கண்ணாடியை உடைத்த ஆலங்குளத்தை சேர்ந்த நடத்துநர் செல்வம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் ஆலங்குளத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News