ஆலங்குளத்திலிருந்து தேவர்குளம் செல்லும் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து தேவர்குளம் வரை செல்லும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டது.

Update: 2021-11-24 02:32 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து தேவர்குளம் வரை செல்லும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கத்தை எம்பி ஞானதிரவியம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து தேவர்குளம் வரை செல்லும் புதிய வழித்தடத்தில் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் வைத்து வழித்தடத்தை மாவட்டக் கழகச் செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆகியோர் வழித்தடத்தை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் ஆலங்குளம் ஒன்றிய கழக செயலாளர் செல்லத்துரை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் MPM அன்பழகன் மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் விஜயன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News