குன்னூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் மற்றும் தகனம்

குன்னூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டது.

Update: 2023-10-02 13:46 GMT

குன்னூர் விபத்தில் உயிரிழந்த முதியவர்.

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 50 -க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்ற போது குன்னூர் அருகே அவர்கள் சென்ற தனியார் பேருந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து குன்னூர் அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, தனித்தனி ஆம்புலன்சில் சொந்த ஊர்கள் நோக்கி கொண்டுவரப்பட்டது. சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக சாலை மார்க்கமாக அதிகாலை கடையம் கொண்டுவரப்பட்டது.


தொடர்ந்து இறந்தவர்களின் உறவினர்கள் மாலை, பூக்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பெண்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.

தொடர்ந்து இவர்களின் உடல்கள் வீட்டின் அருகே கொண்டு செல்லப்பட்டு கடையத்தை சுற்றியுள்ள இடுகாட்டில் இறந்தவர்கள் உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் கடையம் அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த இருவர் உடல் கொண்டு செல்லப்பட்ட உள்ளது, பாபநாசம் அகஸ்தியர்புரம் பகுதியில் ஒருவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் உடல்கள் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.


இந்நிலையில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இறந்தவர்கள் மற்றும் காயம்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. 

மேலும் பேருந்து விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுனர் முத்து குட்டி மீது279,337,304(A) செக்ஸன்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி காயம் மற்றும் மரணம் ஏற்படுத்தியதாக குன்னூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News