கடையம் அருகே கரடி தாக்கியதில் வீ்ட்டு முன் நின்ற மூதாட்டி படுகாயம்
மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதியில் உள்ள கடையம் பகுதியில் வீட்டு முன் நின்று கொண்டிருந்த மூதாட்டி கரடி தாக்கியதி் காயம் அடைந்தார்.;
கடையம் அருகே கரடி தாக்கி மூதாட்டி காயம் அடைந்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான சம்பன் குளம்.கோவிந்த பேரி,கல்யாணிபுரம்,பகவதிபுரம்,வடகரை,பண்பொழி ஆகிய பகுதிகளில் வன விலங்குகளான யானை,சிறுத்தை,கரடி, மான் உள்ளிட்ட விலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வருவது தொடர் கதையாக உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி கல்யாணி புரத்தில் முள்ளிமலை பொத்தை உள்ளது .இந்த பொத்தையில் கரடி, காட்டுப்பன்றி, மிளா உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன .
இதன் நிலையில் இன்று கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்த ராசம்மாள் (வயது70) வழக்கம்போல் காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டு வாசலுக்கு வந்துள்ளார் .அப்போது அங்கு வீட்டில் புதரில் பதுங்கி இருந்த கரடி ஒன்று அவர் மீது பாய்ந்து அவரை தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடர்ந்து கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து காயம் பட்ட வருக்கு நிவாரணம் வழங்கப்படும். மேலும் அந்த பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கூண்டு வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.