ஆலங்குளம்: புதிய இடத்தில் காமராஜர் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழா
ஆலங்குளத்தில் புதிய இடத்தில் காமராஜர் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.;
ஆலங்குளத்தில் புதிய இடத்தில் காமராஜர் சிலை வைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த காமராஜர் சிலை, நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக இடம் மாற்றம் செய்ய இருப்பதால், புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூபாய் 30 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைக்கப்பட்டு இருந்தது. நான்கு வழி சாலை பணியின் காரணமாக இந்த சிலை அப்புறப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஆலங்குளம் அம்பை சாலையில் அரசு சார்பில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள காமராஜர் சிலை ஒதுக்கப்பட்ட இடத்தில் மாற்றி அமைக்கப்பட்டு பின்னர் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் காமராஜருக்கு வெண்கல சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது . இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைப்பு குழு தலைவர் ஜே. கே. ஜான்ரவி தலைமை தாங்கினார். விழாவில், பாராளுமன்ற உறுப்பினர்கள் கன்னியாகுமரி விஜய் வசந்த்,நெல்லை ஞான திரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி பழனி நாடார், ஆலங்குளம் மனோஜ் பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் ஊர்வசி அமிர்தராஜ், தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா , தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், சென்னை பெருநகர மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம்- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்ணியாகுமரி மண்டல தலைவரும், தென்காசி மாவட்ட தலைவருமான டி.பி.வி. வைகுண்ட ராஜாஉள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.