ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அதிமுக எம்எல்ஏஆய்வு

Update: 2021-05-15 09:56 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த பால் மனோஜ் பண்டியன் தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று ஆலங்குளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஆய்வு செய்தார்.. ஆலங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக  தரம்  உயர்த்தப்பட்ட பின்பும் மருத்துவர், செவிலியர், துப்புரவு பணியாளர் உட்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை எனவும், கட்டிடம், மருத்துவ உபகரணங்கள் போன்றவை வசதிகள் இல்லை எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக அதிமுக எம்.எல்.ஏ  பால் மனோஜ் பாண்டியன் உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது ஆலங்குளம் தாசில்தார் பட்டமுத்து, தலைமை மருத்துவ அலுவலர் கீதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஹரிஹர சுப்பிரமணியன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News