லாரியிலிருந்து சாலையில் சிதறிய ஜல்லிகற்களை அப்புறப்படுத்திய ஒன்றிய கவுன்சிலர்

சாலையில் செல்லும் லாரிகளில் இருந்து சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லிக்கற்கலை இளைஞர்களுடன் இணைந்து அகற்றினார்

Update: 2023-04-08 07:20 GMT

கடையத்தில் கனிம வளத்தை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகளால் சாலையில் சிதறிச் சென்ற ஜல்லிகற்கள் ஒன்றிய கவுன்சிலர் தலைமையில் சுத்தம் செய்த இளைஞர்கள்

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் ஏராளமான கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் அளவுக்கு அதிகமாக அரசின் விதிமுறையை மீறி குண்டு கற்கள், மற்றும் ஜல்லி கற்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.

இதனால், கடையம் பொட்டல்புதூர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலை அடிவாரத்தில் போடப்பட்ட குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் கடையம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ஜல்லிக்கற்கள் ஏற்றி சென்ற லாரி ஒன்று கடையம் மெயின் பஜார் பகுதி முழுவதும் சாலையின் நடுவே ஜல்லி கற்களை சிந்திக்கொண்டே சென்றுள்ளது .

இதனால் வாகன ஓட்டிகள் மேல் கற்கள் தெறிக்கும் அபாயம் ஏற்பட்டது . இது குறித்து  தகவலறிந்த தெற்கு கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் தலைமையில் அப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து மெயின் பஜார் மற்றும் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு  சிதறிக் கிடந்த  ஜல்லிக்கற்கள் சுத்தம் செய்தனர். மேலும் இது குறித்து அவர் கடையம் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட கனரக லாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர் புகார் அளித்தார்.

Tags:    

Similar News