17-ம் ஆண்டு தொடக்க விழா: ஆலங்குளத்தில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஆலங்குளத்தில் தேமுதிக 17ம் ஆண்டு துவக்க விழா மாவட்ட செயலாளர் பழனிசங்கர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Update: 2021-09-14 14:20 GMT

தேமுதிக 17ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் பழனிசங்கர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தென்காசி தேமுதிக தெற்கு மாவட்டத்தின் சார்பாக கழக 17ம் ஆண்டு துவக்க விழா ஆலங்குளம் SSN கல்யாண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் பழனி சங்கர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் பதவி குறித்து விவாதிக்கபட்டது.

வேட்புமனு தாக்கல் முன்பாக அரசு வழக்கறிஞரிடம் (நோட்டரி பப்ளிக் வக்கில்) நம்முடைய சொத்து விபரங்கள், கணக்கு விபரங்கள் சொல்லி அபிடப்பிட்டு வாங்க வேண்டும். அனைத்து ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் மற்றும் அனைத்து பதவிகளுக்கும் போட்டியிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் கடையம் சுப்பிரமணியம், தலைமை செயற்குழு உறுப்பினர் சுரண்டை வெற்றிவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News