ஆலங்குளம் அருகே ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைபாம்பு: தீயணைப்புத்துறை மீட்பு
ஆலங்குளம் அருகே ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைபாம்பை தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையினர் மீட்டு வனத்துக்குள் விட்டனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமம். இந்த ஊரின் குடியிருப்பு அருகே உள்ள முட்புதரில் நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று கிடப்பதை அங்கு விளையாடிய சிறுவர்கள் பார்த்துள்ளனர்.
இதனால் அந்த மலைபாம்பை ஊரே திரண்டு வேடிக்கை பார்த்தது. இது குறித்து வனத்துறை மற்றும் ஆலங்குளம் தீயணைப்பு துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுடலைவேல் தலைமையியல் சிறப்பு நிலைய அலுவலர் விசுவநாதன், சிறப்பு நிலைய அலுவலர் சிவக்குமார்,ரமேஷ், ஜஸ்டின் பாக்கியராஜ், திருமலை கணேசன், விவேக், செல்வராஜா மற்றும் வனக்காப்பாளர் டென்சிங் ஆகியோர் மலைபாம்பை மீட்டு ஆலங்குளம் ராமர் கோவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விட்டனர்.