நல்லடக்கம் செய்ய தன்னார்வலர்களுக்கு வாகனம் வழங்கிய ஆலங்குளம் MLA.
ஆலங்குளம் பகுதியில் பசுமை இயக்கத்தினர் பணி பாராட்டுக்குரியது.;
தன்னார்வலர்களுக்கு வாகனம் வழங்கிய மனோஜ்பாண்டியன் MLA.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பசுமை இயக்கத்தினர் கடந்த ஒரு வருடமாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரனோ தொற்றால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்தல் போன்ற செயல்கைளை தொடர்ந்து செய்துவருகின்றனர்.
ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரனோ தொற்றால் இறந்த 18 பேர் உடல்களை சுகாதார பாதுகாப்பு முறைப்படி அடக்கம் செய்துள்ளனர். இவர்கள் தங்களின் சேவைையை சிறப்பாக செய்திட வாகனம் தேவை என்று ஆலங்குளம் MLA. மனோஜ்பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன் பசுமை இயக்கத்தின் தலைவர் சாமுவேல் பிரபுவிடம் வாகனத்தை ஒப்படைத்தார். ஆலங்குளம் பசுமை இயக்க சென்னை பிரிதிநிதி ரமேஷ், செயலாளர் செல்வன், பொருளாளர் லெனின், ஜசக் இம்மானுவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள், பசுமை இயக்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.