கல்லூத்து கிராமத்துக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் போக்குவரத்து துவக்கம்
கல்லூத்து கிராமத்துக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.;
கல்லூத்து கிராமத்துக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் போக்குவரத்து துவக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லூத்து கிராமத்திற்கு 43D,43 Fஆகிய பேருந்துகள் சட்டத்துறை அமைச்சராக இருந்த ஆலடி அருணா ஏற்பாட்டில் கல்லுத்து வழியாக சுரண்டை மற்றும் சேர்ந்தமரம் வரை பேருந்து இயக்கப்பட்டது.
ஆனால் கடந்த பத்தாண்டு காலம் கல்லூத்து கிராமத்திற்கு எந்தப் பேருந்தும் வரவில்லை. இந்நிலையில் தங்கள் பகுதிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்போது கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கல்லூத்து வழியாக திருநெல்வேலிக்கும், கல்லூத்து வழியாக சுரண்டை சேர்ந்த மரத்திற்கும் செல்லுகிற வகையில் 43D என்கிற நகரப் பேருந்தும், 43F என்கிற நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தொடங்கி வைத்தார்.
கிராமத்திற்கு இரண்டு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தந்த தமிழக முதல்வர்க்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.