தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அமைச்சர் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பழமையான பிரசித்தி பெற்ற கோவில்களில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, ஆழ்வார்குறிச்சி ஸ்ரீவன்னியப்பர் கோவில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கோவிலிலுக்கு போதிய வருமானம் இல்லாததால் குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயில்களில் காலியாக உள்ள பணி இடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். வன்னியப்பர் கோவியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் சேகர்பாபு.
இதனைத் தொடர்ந்து கீழப்பாவூர் திருவாலீஸ்வர் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், போன்ற கோவில்களை அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார்.