குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி.
ஆலங்குளத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
ஆலங்குளம்: குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சண்முகபுரத்தில் புவன், இஷாந்த், சண்முகபிரியா ஆகிய மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிர் இழந்தனர். அதேபோல் மாறாந்தையில் மதன் (7) ஊரணியில் தவறி விழுந்து உயிரிழந்தான். இந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு ரூ.25,000 நிதி உதவியை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.