கடையத்தில் பொதுமுடக்க விதிமுறைகள் - அதிகாரிகள் ஆய்வு

கடையத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம்;

Update: 2021-05-21 05:37 GMT

கடையத்தில் பொதுமுடக்க விதிமுறைகள் - அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. 

கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைபிடிப்பது குறித்து கடையம் பகுதியில்  வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஆய்வின் போது, காய்கறி, மளிகைக் கடைகளில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் நிற்க அறிவுறுத்தினர். உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க வேண்டும் அமர்ந்து உணவருந்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.

மேலும் விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதித்தனர். பொது இடங்களில் வாகனங்களில் செல்பவர்களை முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தினர்.

ஆய்வின் போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகப்பா, முஹைதீன்பாத்திமா, ஊராட்சி செயலர்கள் வேல்சாமி, பழனி, ஜெயசக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News