ஆலங்குளம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் கண்ணன்(33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
அதே போல் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கீழஆம்பூர் பகுதியை சேர்ந்த பிரம்மாச்சி என்பவரின் மகன் கருத்தப்பாண்டி என்பவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.