வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆலங்குளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆலங்குளத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. ஆலங்குளம் நகர தலைவர் தங்க செல்வம் தலைமை தாங்கினார். நகர பொதுச்செயலாளர் அருமைநாயகம், வட்டார தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு மாநில துணை தலைவர் பால்ராஜ், சிறுபான்மை பிரிவு நகர தலைவர் தாமஸ், கிழக்கு மாவட்ட செயலாளர் ரூபன் தேவதாஸ், நகர பொருளாளர் தங்கராஜ், ஓபிசி பிரிவு செயலாளர் ஞானபிரகாஷ், நகர செயலாளர் லிவிங்ஸ்டன், நகர ஊடகப்பரிவு அரவிந்த், நகர துணை பொதுச்செயலாளர் ஏசுராஜா, வேலாயுதம்,பொன்னுச்சாமி, பிஎஸ்என்எல் ராஜேந்திரன், காசிபெருமாள், முப்பிடாதி, இசக்கிமுத்து, மகாராஜா, முருகன், லட்சுமணன் முப்பிடாதி, ஆறுமுகம், பிரதாப், செல்லமணி, மகாராஜா, துரைப்பாண்டி, திரவியம் குருவன்கோட்டை காமராஜ், கிருஷ்ணன், செல்வம், மாடக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.