பள்ளிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு
ஆலங்குளம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று 8 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டது, அதேபோல் அனைத்து கல்லூரிகளும் தொடங்கப்பட்டது. பள்ளி கல்லூரிகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருணா உத்தரவின்பேரில் நெட்டூர் மருத்துவ அலுவலர் குத்தால ராஜ் அறிவுறுத்தலின் பேரில், சுகாதார ஆய்வாளர்கள் கங்காதரன் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான சுகாதாரத்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டனர். பள்ளிகளில் வரும் மாணவ-மாணவிகளுக்கு சமூக இடைவேளை, முக கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து முக கவசம் இல்லாத மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் முகக் கவசம் வழங்கப்பட்டது.