ஆலங்குளம் தொகுதி மக்களை சந்தித்தார்: வேட்பாளர் ஹரிநாடார்
பனங்காட்டு படை கட்சியில் ஒருங்கிணைப்பாளரும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஹரி நாடார் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.;
ஆலங்குளம் அரசு மருத்துவமனை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் இங்கு உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதி குறைவாக உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நோயாளிகள் வந்து செல்கின்னறனர். இங்கு நோயாளிகளுக்கு சிசிக்சை வழங்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லை எனவும், விபத்து, மற்றும் பிரசவத்திற்காக வரும் பெண்கள் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனை ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை மட்டும் வழங்கி அந்த நோயாளிகளை தென்காசி திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்து விடுகின்றனர் என்று மக்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில பனங்காட்டு படை கட்சியில் ஒருங்கிணைப்பாளரும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஹரி நாடார் இன்று ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை போதுமான மருத்துவர்கள் உள்ளனரா? என்பதை அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டசத்து பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட செயலாளர் ஆனந்த், துணை செயலாளர் செல்வராஜ், ஆலங்குளம் சோனா மகேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜோசப், இளைஞரணி துணை செயலாளர் சதீஷ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் விக்னேஷ் கார்த்திக், லாரன்ஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சேர்மராஜா ஆலங்குளம் நகர செயலாளர் அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.