தென்காசி மாவட்டத்தில் மினி கிளினிக்குகள் திறப்பு

Update: 2021-01-21 07:15 GMT

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டாரம் நல்லூர் கிராமம், கீழப்பாவூர் வட்டாரம் பூலாங்குளம் கிராமம், கடையம் வட்டாரம் கல்யாணிபுரம் ஆகிய கிராமங்களில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை மூலம் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி திறந்து வைத்து தெரிவித்ததாவது:-

அம்மா மினி கிளினிக்குகள் கிராம புற பகுதிகளில் காலையில் 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும். நகர பகுதிகளில் காலையில் 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலையில் 4 முதல் 8 மணி வரையிலும் செயல்படும். அம்மா மினி கிளினிக்கில் புற நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை, தாய் சேய் நல பணிகள், தடுப்பூசி வழங்குதல், தொற்று நோய்கள், அவசர சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News