மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தது தமிழக குழு
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கான அமைக்கப்பட்ட குழு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தது;
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கான, முதலமைச்சர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட அமைக்கப்பட்ட குழுவினர் மத்திய அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் , இக்குழுவின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி, எம். எம். அப்துல்லா, தமிழ்நாடு இல்லத்தில் முதன்மை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் உடனிருந்தனர்.